நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்டமாக 25,000 ரூபா அபராதத்தை அறவிடும் வர்த்தமானி அறிவித்தல் அரசாஙகத்தினால் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அபராதத் தொகை ஊடாக அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்லும் சட்டத்தை நீக்குதல் மற்றும், மேல் மாகாண பேருந்துகளுக்கு ஒரு நிறத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9137 Mukadu · All rights reserved · designed by Speed IT net