இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு!

இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் அவரது வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு என பல்வேறு பிரிவு பொலிஸார் வருகை தந்தனர்.

இதன்போது குறித்து குண்டுகள் சோதனை செய்யப்பட்டன. அவை விமானங்களை சுட்டு வீழ்த்தி அழிக்க கூடிய துப்பாக்கி குண்டுகள் என தெரிய வந்தது.

அவை ஒவ்வொன்றும் 30 மீ. மீட்டர் நீளம் கொண்டவை. அவை செயல்படும் நிலையில் இருந்தமையும் கண்டறியப்பட்டது. உடனே அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © 7102 Mukadu · All rights reserved · designed by Speed IT net