அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு.

அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு.

அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாகவுள்ள வெற்றுக் காணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியை துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் பெகோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் 2 பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகள், மகசின்கள் மற்றும் மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டன.

துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், துப்பரவு பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு அதிரடிப் படையினர் வந்து ஆயுதங்களை மீட்ட பின்னர் துப்பரவு பணிகளை முன்னெடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Copyright © 6224 Mukadu · All rights reserved · designed by Speed IT net