மீண்டும் பணிப்புறக்கணிப்பு – நாட்டு மக்களுக்கு நெருக்கடி!

மீண்டும் பணிப்புறக்கணிப்பு – நாட்டு மக்களுக்கு நெருக்கடி!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக சில ரயில் மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கமும் இன்று நள்ளிரவு முதல் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net