150 மில்லியன் வருட பழமையான ராட்சத டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில்!
பரிஸில் 150 மில்லியன் வருட பழமையான ராட்சத டைனோசர் எலும்புக்கூடு ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் பரிஸில் இடம்பெறவுள்ள ‘பரிஸ் ஏலத்தில்’ இந்த டைனோசர் எலும்புக்கூடு ஏலத்திற்கு விடப்படவுள்ளது.
‘Skinny’ என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த டைனோசர் எலும்புக்கூடு 13 மீற்றர் நீளமும், 6.20 மீற்றர் உயரமும் கொண்ட ராட்சத எலும்புக்கூடு ஆகும்.
ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை லண்டனின் ஹீத்துரு விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த டைனோசர் எலும்புக்கூடு, ஏல விற்பனையை அடுத்து உரியவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூடு 1.5 மில்லியன் யூரோக்களில் இருந்து, 2 மில்லியன் யூரோக்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த டைனோசர் எலும்புக்கூடு தனது சொந்த காலில் நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.