நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

உமா ஓயா நீர்மின்சார திட்டத்தின் காலதாமதமே நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்களுக்கான காரணம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நேற்று இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டப்படி 2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும்.

இந்த திட்டத்தின் மூலம் தேசிய மின்சார உற்பத்திக்கு 120 மெகாவோட்ஸ் மின்சாரம் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

உமா ஓயா நீர்மின்சார திட்டத்துக்காக செலவிடப்படும் முழு தொகை 6 பில்லியன் ரூபாவாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net