வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்காரங்கள் இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய வாசனை திரவியங்கள் பயன்படுத்துபவர்கள் அதன் தரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையத்தின் பணிப்பாளர் பவுஸர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த இந்த சுற்றிவளைப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.