முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்!

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம்!

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பதிவு ஒன்றுக்கு விருப்பிட்டார் (like) என்ற குற்றச்சாட்டில் குறித்த முன்னாள் போராளியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸார் ஊடாக அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்.

எவ்வாறாயினும், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net