14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்தில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
150,000 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான ஆண்ட்ரூ வின்டர் என்பவர் தன்னுடைய சகோதரர் டோபியாஸ் நோவக் (30), மற்றும் நண்பர்கள் மேட்டூஸ் (33) மற்றும் தாரியஸ் ஃபிஜல்கோவ்ஸ்கி (44) ஆகியோருடன் இணைந்து புக்கிங்ஹாம்ஷையர் பகுதியில் மொத்தமாக 550 இற்கும் மேற்பட்ட நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
எட்வர்ட் 1 மற்றும் II ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 545 வெள்ளி நாணயங்களும், எட்வர்ட் III காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிதான 12 தங்க நாணயங்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
600 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வந்தர் ஒருவர், பாதுகாப்பிற்காக இதனை புதைத்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.