எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.
நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நாடு பூராவும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை தவணை விடுமுறை முடிந்து நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாக இருந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளையும், நாளை மறு தினமும் மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.