“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்”

“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்”

இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்களை வன்மையாக கண்டிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந் நேரத்தில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் துணை நிற்கும் எனவும், இந்த கொடூர பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தன் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அந்த பதிவில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பதிவினை அவர் சிங்களத்திலும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net