நாட்டின் அநேக தேவாலயங்களின் திருப்பலி பூஜைகள் ரத்து.
நாட்டின் அநேகமான தேவாலங்களில் திருப்பலி பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட சில தேவாலயங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இவ்வாறு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அநேக தேவாலயங்களில் நாள் முழுவதிலும் இன்று விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.