கொழும்பில் மேலும் மூன்று ஹோட்டல்களில் வெடிப்பு
கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சங்கீர்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின் ஆறு இடங்களில் அதாவது மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.