கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டு நேற்றைய தினம் சுமார் 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

மீட்கப்பட்ட இந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட குண்டு ஒன்றே இவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்திற்குள் பயணிகள் தவிர்ந்த வேறும் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1849 Mukadu · All rights reserved · designed by Speed IT net