நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சகல பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.