இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்!

இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்!

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 8.30 மணிமுதல் 8.33 மணிவரை மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இயேசு பிரானின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 290 உயிரிழந்துள்ளதுடன், 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7894 Mukadu · All rights reserved · designed by Speed IT net