பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார்!

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார் : தொலைபேசி மூலம் ட்ரம்ப்!

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு அனைத்துவிதமான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பலவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி உரையாடியுள்ளார்.

இதன்போதே இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முழுமையான ஆதரவினை வழங்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Copyright © 1075 Mukadu · All rights reserved · designed by Speed IT net