//anjeng நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு | Mukadu

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள் மற்றும் வெடிபொருள்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் தற்கொலைதாரிகள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் நடத்தப்பட்ட சோதனையின் போது சிறிய தகடுகள், மேலும் சில பொருட்களும், பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net