//anjeng அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்! | Mukadu

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

சன்டியாகோ நகருக்கு வடக்காக அமைந்துள்ள போவே நகரிலுள்ள வழிபாட்டுத்தலத்திலேயே இந்தத் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த வழிபாட்டுத்தலத்தில் பாஸ்கா விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தத் தாக்குதலானது வெறுக்கத்தக்க ஒரு செயல் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net