இலங்கையில் இன்று முதல் புர்கா உடைக்கு தடை!

இலங்கையில் இன்று முதல் புர்கா உடைக்கு தடை!

நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி,

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்படுகிறது.

இன்று முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 3077 Mukadu · All rights reserved · designed by Speed IT net