மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்திற்கு முதல் முறையாக பிரித்தானியர் அல்லாத தலைவராக சங்கக்கார.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்திற்கு முதல் முறையாக பிரித்தானியர் அல்லாத தலைவராக சங்கக்கார.

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று (01) லோட்ஸில் இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.

இதேவேளை, குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிரிக்கெட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் எம்.சி.சி, கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6582 Mukadu · All rights reserved · designed by Speed IT net