இரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்பு

இரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்பு

ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடுமுழுவழும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த சோதனை நடவடிக்கைகளில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் பலர் கைதுசெய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 0095 Mukadu · All rights reserved · designed by Speed IT net