மாகந்துரே மதூஷ் CID தலைமையகத்தில் ஒப்படைப்பு!
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.