//anjeng 25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர்! | Mukadu

25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர்!

25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர்!

25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே இன்னமும் பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படையினர் தீவிரவாதத்தை இல்லாதொழிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அதற்கு முன்னதாக தீவிரவாதம் இல்லாதொழிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களை ஒத்தி வைக்க முடியாது எனவும் அதற்கு முன்னதாக நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகளே மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கு அவர்களே உரிமை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எப்.பி.ஐ. உள்ளிட்ட எட்டு நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net