பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் விபரம் வெளியானது!

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் விபரம் வெளியானது!

ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்தவகையில் தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவற்றினை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த வங்கிக் கணக்கை முடக்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனறும் அவர்களின் ஏனைய சொத்துக்கள் தொடர்பபாகவும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 6061 Mukadu · All rights reserved · designed by Speed IT net