பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலனவை, தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Copyright © 9476 Mukadu · All rights reserved · designed by Speed IT net