தற்கொலை தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர் கைது!

தற்கொலை தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர் கைது!

தற்கொலை குண்டு தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “தாக்குதலை நடத்த திட்டமிட்ட குறித்த நபரை கைது செய்வதற்கு இலங்கையிலிருந்து அதிகாரிகள், சவூதி அரேபியாவிற்கு சென்றிருந்தனர்.

“சவூதி அரேபியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர் தொடர் தற்கொலை தாக்குதலுக்கு பின்னால் உள்ள தலைவர்கள் ஆவார். இந்த பயங்கரவாதக் குழுவில் 130-140 சந்தேக நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அவர்களில் சிலர் தற்கொலை குண்டுதாக்குதல்களில் உயிரிழந்துவிட்டனர். எவ்வாறாயினும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை இப்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2200 Mukadu · All rights reserved · designed by Speed IT net