புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா!

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா!

பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும் எச்.எம்.காமினி செனெவிரத்ன உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும்,கே.ஜீ.அசோகா அலவத்த ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net