மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள்!

மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள்!

சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமனறில் சமர்ப்பிக்க முடியும் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சஹ்ரான் ஹஸீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சஹ்ரான் ஹஸீமினின் மகளின் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

இந்த இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமனறில் சமர்ப்பிக்க முடியும் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net