சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை முட்டாள்தனமான வேலை!

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை முட்டாள்தனமான வேலை!

சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊடகங்களில் சில விடயங்களை காண்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கும் அவர் இதன்போது எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“சமூகவலைத்தளங்கள் மீதான தடையை விதித்தல், ஆயுதங்கள் கண்டுபிடிபடும் போது அவற்றை ஊடகங்களில் காண்பிக்கவிடாமல் தடுத்தல் என்பன முட்டாள்தனமான வேலை.

இதனால் நாட்டு மக்களுக்கு சந்தேகம் அதிகரிக்குமே தவிர பிரச்சினை ஒருபோதும் தீராது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து இன்று காலை பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net