கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டாரா?

ஊக்கமருந்து உட்கொண்டாரா கோமதி மாரிமுத்து? அடுத்த கட்ட சோதனையில் உண்மை தெரியும்.

சிவாகத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து (வயது 30) 2 நிமிடம் 70 விநாடிகளில் எல்லையைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இது அவரது சிறந்த ஓட்ட நேரமாக குறிப்பிடப்படுகிறது. தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

இவரின் சாதனையை அனைவரும் பாராட்டினர். தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.15 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

மேலும் நடிகா்க விஜய் சேதுபதி ரூ.5 லட்சமும், ரோபோ ஷங்கா் ரூ.1 லட்சமும் வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து, ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோமதி மாரிமுத்துவுக்கு பெரும் அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டதாக முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

அதேவேளையில் விவாதத்துக்கும் உள்ளாகி உள்ளது.

தற்போது முதற்கட்ட சோதனை மட்டுமே நடைபெற்றுள்ளது என்றும், அடுத்து இரண்டாவது கட்ட சோதனை நடைபெற உள்ளது. அதில் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், அவர் வென்ற தங்கப்பதக்கம் மற்றும் பரிசு பறிக்கப்படும்.

மேலும் போட்டிகளில் பங்கேற்க்க நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்கமருந்து உட்கொண்டதாக வெளியான செய்திகள் தொடர்பாக பேசிய ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து, நான் எந்தவிதமான ஊக்கமருந்தும் பயன்படுத்த வில்லை. இதுவரை என் வாழ்வில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நான் பயன்படுத்தியதே இல்லை.

என்னைக் குறித்து வரும் செய்தியை, நான் செய்திதாள்களில் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன். இதுக்குறித்து முழுமையான விளக்கம் அளிக்கும் படி தடகள சம்மேளனத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன் எனக் கூறினார்.

Copyright © 5922 Mukadu · All rights reserved · designed by Speed IT net