அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் CCTV.

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் CCTV.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்தோடு, பாடசாலைகளில் தவணை சோதனைகளை இரத்துச் செய்வதற்கான எந்தவித திட்டமும் இல்லை என்பதோடு, வழமை போன்று க.பொ.த. சாதாரணதர,  உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சைகளை ஒத்திப்போடுவதால், ஏனைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கப் பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதிக்கு ஈடுசெய்யும் வகையில், ஓகஸ்ட் மாத விடுமுறையை இரத்துச் செய்வதா என்பது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அவர் தெரிவித்தார்.

Copyright © 9164 Mukadu · All rights reserved · designed by Speed IT net