‘மாநாடு’ திரைப்படத்தில் கங்கை அமரன் நடிக்கவில்லை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு – கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.

அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும் இயக்குநரும் நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு தற்போது மறுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net