தலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

தலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் சடலத்தை கண்ட மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை ஒலிரூட் கீழ் பிரிவைச் சேர்ந்த பெனடிக் ரொஷான் (23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 5578 Mukadu · All rights reserved · designed by Speed IT net