//anjeng எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்! | Mukadu

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்!

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்!

அரசாங்கத்தை எந்த நேரத்திலும் மாற்றத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை கவிழ்க்க யோசனை ஒன்றை கொண்டு வந்தால், அதற்கு ஆதரவாக வாக்களிக்கவும் தயார்.

அரசாங்கத்திற்குள் காணப்படும் பிரச்சினைகளை மூடி மறைக்க நாடும் உலகமும் பார்த்துக்கொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றை மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net