//anjeng பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்! | Mukadu

பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்தில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net