கொழும்பு துறைமுக அபிவிருத்தி!

கொழும்பு துறைமுக அபிவிருத்தி!

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது.

குறித்த இணைப்பு திட்டத்தின் ஊடாக மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற நீண்டகால புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

1980 ஆம் ஆண்டு கால பகுதியில் ஜப்பான், ஜயா கொள்கலன்கள் முனைய அபிவிருத்தியின் ஊடாக முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது.

கொழும்பு துறைமுகத்தின் 70 சதவீதமான மீள் ஏற்றுமதி வர்த்தகம் இந்தியாவுடன் தொடர்புப்பட்டே முன்னெடுக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி, பிராந்திய நலன் மற்றும் சர்வதேச வர்த்தக செயற்பாடுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1360 Mukadu · All rights reserved · designed by Speed IT net