மஹிந்­த­வுக்கு குண்­டு­ து­ளைக்­காத கார் வழங்­க அனு­மதி மறுப்பு.

மஹிந்­த­வுக்கு குண்­டு­ து­ளைக்­காத கார் வழங்­க அனு­மதி மறுப்பு.

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு குண்டு துளைக்­காத கார் ஒன்­றினை வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவை பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை மறுத்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது எதிர்க்­கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்ச தனக்கு குண்டு துளைக்­காத கார் ஒன்­றினை வழங்க வேண்டும் என தன்­னிடம் கோரி­யுள்­ள­தா­கவும் இதனால் இதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை சமர்ப்­பிப்­ப­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்னை விட அதி­க­மான குண்­டு­து­ளைக்­காத வாக­னங்கள் மகிந்த ராஜ­பக்­ச­விடம் உள்­ளது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­யுற்று அவர் வீடு செல்லும் போது இரண்டு குண்டு துளைக்­காத வாக­னங்­களை கொண்டு சென்­றி­ருந்தார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி அவர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற போது மற்­று­மொரு குண்டு துளைக்­காத கார் வழங்­கப்­பட்­டது. எனவே தற்­போ­தைய நிலையில் அவ­ருக்கு மற்­று­மொரு குண்­டு­து­ளைக்­காத கார் வழங்க வேண்­டுமா எனக் கேள்வி எழுப்­பினார்.

அமைச்­சர்­களும் எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கு மற்­று­மொரு குண்­டு­து­ளைக்­காத கார் வழங்­கப்­பட வேண்­டி­ய­தில்லை. ஏற்­க­னவே மூன்று குண்­டு­து­ளைக்­காத வாக­னங்கள் அவ­ரிடம் இருக்­கின்­றன.

ஜனா­தி­ப­தி­யி­டமோ பிர­த­ம­ரி­டமோ இல்­லாத வாக­னங்கள் அவ­ரிடம் உள்­ளன. இந்த நாட்டில் யார் ஜனா­தி­பதி என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டுதுளைக்காத புதிய கார் வழங்கத் தேவையில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் நிராகரிக்கப்பட்டது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net