மொனராகலையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி மீட்பு.

மொனராகலையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி மீட்பு.

மொனராகலை – தனமல்வில பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.

அதன் பின்னர் பொதினை சோதனையிட்டபோதே அதனுள் பல வெடிபொருட்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த இடத்தில் மேலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து, முப்படையினரும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய அன்றாடம் பல வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதுடன், சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net