இலங்கையில் கட்டாயப்படுத்தப்படும் புதிய நடைமுறை!

இலங்கையில் கட்டாயப்படுத்தப்படும் புதிய நடைமுறை!

சீனி, உப்பு மற்றும் ஏனைய சேர்மானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திண்ம மற்றும் அரைத்திண்ம உணவுப்பொருட்களில் உள்ளடக்கப்படும் சீனி, உப்பு மற்றும் ஏனைய சேர்மானங்கள் தொடர்பான நிறக்குறியீட்டை காட்சிப்படுத்துவது அவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவு உற்பத்திகளிலும், சீனி உள்ளிட்ட சேர்மானங்களுக்கான நிறக்குறியீட்டை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net