ஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்! இயற்கையான உணவு.
பல இளைஞர்கள் தங்களது உடலை நினைத்து கவலை கொண்டு வருகிறார்கள். ஒல்லியாக இருக்கும் நபர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
அதற்கு எதிர்மறையாக உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் ஒல்லியாக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
இப்படியிருக்கையில் உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
உடல் எடை அதிகரிக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது தேங்காய் பாலை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
உடல் எடை அதிகரிக்க மிகவும் உதவுவது வாழை, அதிலும் நேந்திரம் பழ துண்டுகளை தேனுடன் சேர்த்து மாலை வேளைகளில் நொறுக்கு தீனியை சாப்பிட்டால் எடை உயர்த்துவதுடன் நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.
பசும்பால், பசு வெண்ணெய் உடல் எடையை கூட்ட உதவும் என கூறியுள்ளனர்.