//anjeng ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்! | Mukadu

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியூதின், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நேற்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று அங்கு மீண்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

ரிஷாட் பதியூதின், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக்கக் கோரி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net