1000 மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கப் போகும் ‘ரவுடி பேபி’

1000 மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கப் போகும் ‘ரவுடி பேபி’

யூடியூப் தளத்தில் தற்போது ‘ரவுடி பேபி’ பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மீண்டும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

சர்வதேச அளவில் இப்பாடலின் காணொளிக்கு கவனம் கிடைத்துள்ளதுடன் இந்த பாடல் யூடியூப் தளத்தில் அவ்வப்போது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்து வருகின்றது.

இதுகுறித்து தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும் 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும் 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘மாரி 2’ திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அதிகமானோர் பார்வையிட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net