ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டம்!

ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டம்!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தறையிலுள்ள விகாரை ஒன்றில் தேரர்கள் சிலர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த ரிசாத் பதியுதினுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அவரை கைது செய்யும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக தேரர்கள் அறிவித்துள்ளனர்.

தேரர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பெருமளவு மக்கள் அங்கு கூடியுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Copyright © 6047 Mukadu · All rights reserved · designed by Speed IT net