ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன்!

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன்!

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் நான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை. மஹிந்த தரப்­பு­டனும் இணை­யப்­போ­வ­தில்லை. ஐக்­கிய தேசிய முன்­னணி தங்­க­ளது வேட்­பா­ளர் யார் என்­பதை அறி­வித்து அர­சியல் வேலைத்­திட்­டங்­களை திறம்­பட செயற்­ப­டுத்­தினால் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது குறித்து பரி­சீ­லிக்கத் தயார்.

இல்­லையேல் அடுத்த தேர்­தலில் மத்­தி­யஸ்­த­மாக செயற்­ப­டுவேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்கள் தொடர்பில் ஆரா­யப்­பட்ட பின்னர் பிற விட­ய­தா­னங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­தார்.

இதன்­போது தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி,

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் நான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை. மஹிந்­த­வு­டனும் இணை­யப்­போ­வ­தில்லை. ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­ன­ரா­கிய நீங்கள் உட­ன­டி­யாக அர­சியல் செயற்­பாட்­டினை ஆரம்­பிக்­க­வேண்டும். அர­சியல் செயற்­றிட்டம் உங்­க­ளிடம் காணப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் தொடர்பில் அறி­வித்து அர­சியல் வேலைத்­திட்­டத்தை திறம்­பட நீங்கள் மேற்­கொள்­வீர்­க­ளாயின் அதன்­போது ஒத்­து­ழைப்பை வழங்க நான் தயா­ராக இருக்­கின்றேன்.

இல்­லா­விட்டால் நான் நடு­நி­லை­மை­யாக இருக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும்.

மஹிந்த அணி­யினர் முழு­மை­யாக சிங்­கள பௌத்த வாக்­குக்­களை வெற்­றி­பெ­றலாம் என்று கரு­தி­யுள்­ளனர். சிறு­பான்மை மக்­க­ளது வாக்­குக்கள் கிடைக்­காது என்­ப­தனால் சிங்­கள பௌத்த வாக்­கு­களை முழு­மை­யாக பெற்று வெற்­றி­பெ­று­வ­தற்கு அவர்கள் முயல்­கின்­றனர்.

இத­னால்தான் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­வதில் மஹிந்த அணி­யி­ன­ரது உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சை கோரு­வதை விடுத்து நீங்கள் அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பெறு­வது முக்­கி­ய­மல்ல. அர­சியல் செயற்­றிட்­டத்தை ஆரம்­பிப்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும்.

பிர­த­மரும் அமைச்­சர்கள் சிலரும் என்னை நேற்று (நேற்று முன்­தினம்) இரவு சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இதன்­போது சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்­கு­மாறு அவர்கள் கோரி­னார்கள்.

சட்டம் ஒழுங்­கிற்கு இரா­ஜாங்க அமைச்­சரை நிய­மிப்­ப­தற்கு நான் தயா­ராக உள்ளேன். ஆனால் ருவன் விஜ­ய­வர்த்­த­னவை அந்தப் பத­விக்கு நிய­மிக்க முடி­யாது. அவர் பல­வீ­ன­மான ஒரு­வ­ராக காணப்­ப­டு­கின்றார்.

எனவே பல­மான ஒரு­வரை பிரே­ரித்தால் இரா­ஜாங்க அமைச்சை வழங்க முடியும். இது குறித்து பிர­த­ம­ரிடம் நான் எடுத்­துக்­கூ­றி­யுள்ளேன். அதனை தற்­போது உங்­க­ளுக்கும் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன் என்று தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­விற்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்றும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டினை விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net