முஸ்லிம் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை!

முஸ்லிம் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை!

அடுத்தவர்களது பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடுத்து வாழ்வதற்கு பழகும் சமயத்தை பின்பற்றும் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைவாழ் முஸ்லிம் மக்களால் புனித நோன்புப் பெருநாள் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது சமயக் கடமைகளை நிறைவுசெய்து இன்றைய தினத்தில் ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அனைவரினதும் பிரார்த்தனைகளால், சூழ்ந்திருக்கக்கூடிய அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்கி சகோதரத்துவத்துடன் கைகோர்த்து வாழக்கூடிய எதிர்காலம் அமையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Copyright © 8489 Mukadu · All rights reserved · designed by Speed IT net