தெஹிவளையில் கால்வாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு.

தெஹிவளை பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு.

தெஹிவளை பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிசுவின் சடலம் நேற்று நெதிமால சுமிந்து ராஜபக்ஸ மாவத்தைக்கு அருகிலுள்ள கால்வாயில் கிடந்துள்ளது.

இதனை அவதானித்த கல்கிஸ்சை நகரசபை ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், சிசுவின் சடலம் மீட்கப்பட்டு கலுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net