மன்னாரில் 140.760 கி.கி. கேரள கஞ்சா மீட்பு.

மன்னாரில் 140.760 கி.கி. கேரள கஞ்சா மீட்பு.

மன்னார் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், ரோலர் படகொன்றுடன் 140.760 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.

வழக்கமான ரோந்துப் பணியில் நேற்று (05) ஈடுபட்டிருந்தபோது மன்னார், பேசாலைக் கடற்பரப்புக்கு அப்பாலான பகுதியில் குறித்த படகு கைவிடப்பட்ட நிலையிலிருந்ததாகவும் அப்படகிலிருந்து கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன்போது எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த கடற்படையினர், தாம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக சந்தேக நபருக்கு தகவல் தெரிந்த நிலையில் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் ரோலர் படகையும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Copyright © 7055 Mukadu · All rights reserved · designed by Speed IT net