விஜய் நடிப்பில் உருவாகி வரும் #Thalapathy63 திரைப்படத்தின் இசையமைப்பு பணியை துவங்கிவிட்டதாக இசைப்புயல் AR ரகுமான் தெரிவித்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்!
விஜய் இத்திரைப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என உறுதியானது.
விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரையிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் வேலையை துவங்கி விட்டதாக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
Look who is here ?I am the first to see … edit of two songs ??? pic.twitter.com/obUmUvQ94z
— A.R.Rahman (@arrahman) June 4, 2019