விமல், எஸ்.பி.க்கு எதிராக ரிஷாத் முறைப்பாடு.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் முறைபாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தன் மீது சுமத்தப்பட்டு வரும் அப்பாட்டமான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே மேற்கண்ட முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாகவும் ரிஷாத் பதியூதீன் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்க்காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தான் இந்த முறைப்பாட்டைப் பதிவுசெய்யப் போவதாக ரிஷாட் குறிப்பிட்டாலும் பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொண்டு, குறித்த முறைப்பாட்டை பொலிஸ் தலைமையகத்திடமே பதிவு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net